நீட் தேர்வுக்கு Careers360 வழங்கும் சிறப்புப் பயிற்சி... விகடன் வாசகர்களுக்கு சிறப்புச் சலுகை!

நீட் தேர்வுக்கு Careers360 வழங்கும் சிறப்புப் பயிற்சி...  விகடன் வாசகர்களுக்கு சிறப்புச் சலுகை!

நீட்... பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு. இது, சென்ற ஆண்டு முதல் இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை, `நீட்’ மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்றது. இந்த ஆண்டும் வரும் மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நீட் தேர்வுக்கு, மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது உடனடித் தேவையாக இருக்கிறது. 

'நீட்’ தேர்வு அவ்வளவு கடினமா?

இந்த நீட் தேர்வு மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இல்லை என்கிற நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு, `நீட் தேர்வு எப்படிப்பட்டது? என்ன மாதிரியான கேள்விகள் வரும்?' என்பதில் தொடங்கி தேர்வில் வெற்றிபெறுவதற்கான சூத்திரங்கள் வரை முறையான பயிற்சி அளித்தால், இவர்களாலும் `நீட்’ தேர்வை தயக்கமின்றி எதிர்கொண்டு தங்கள் மருத்துவக் கனவை அடைய முடியும்.

இந்தப் பயிற்சியை யார் வழங்குவது?

NEET மட்டுமல்லாமல் JEE, GATE, CAT எனப் பல்வேறு கல்வி சார்ந்த நுழைவுத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்துவரும் ஒரு நிறுவனம் `Careers360'. 500-க்கும் மேற்பட்ட தேர்வுகளுக்காக 250-க்கும் மேற்பட்ட பயிற்சி கோர்ஸ்களை நடத்திவரும் இந்த நிறுவனம், நீட் தேர்வில் எளிதாக வெற்றிபெற ஒரு Crash Course நடத்துகிறது.''

இந்த கோர்ஸில் என்ன இருக்கும்?

`Knockout NEET' என்ற இந்த கோர்ஸில் 5000-க்கும் அதிகமான ஃபார்முலாக்கள், எளிய விளக்கங்கள், சின்னச் சின்ன டிப்ஸ்கள், பாடவாரியாக 2000-க்கும் அதிகமான கேள்வி-பதில்கள், நீட் தேர்வில் அதிகம் கேட்கப்படும் கேள்விகள் எவை எவை? மிகவும் கடினமான கேள்விகள் எவை? அதை எப்படி எதிர்கொள்வது? என்பதுடன் 15 வருட நீட் தேர்வு கேள்வி-பதில் அடங்கிய வினா-விடைகளும் தரப்படும். இவை கோர்ஸ் மெட்டீரியல். இதுபோக, சப்ஜெக்ட், அத்தியாயம்வாரியாக பல்வேறு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அந்தத் தேர்வுகளில் உங்கள் மதிப்பெண்ணை வைத்து நீங்கள் எந்தெந்தப் பாடத்தில் கில்லி, எவற்றில் இன்னும் உங்களுக்குப் பயிற்சி தேவை போன்ற ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி வருமே... 'இத்தனையும் இருந்தால், இந்த கோர்ஸுக்கு ஃபீஸ் ஜாஸ்தியா இருக்குமோ?!’

இந்த கோர்ஸுக்கான கட்டணம் 4,999 ரூபாய். ஆனால், விகடன் வாசகர்களுக்காக Careers360 நிறுவனம் 90 சதவிகிதம் வரை கட்டணச் சலுகை தர இருக்கிறது. முதலில் பதிவுசெய்யும் 500 மாணவர்களுக்கு 90 சதவிகிதம்,  அடுத்த 500 பேருக்கு 80 சதவிகிதம், அதற்கடுத்த 1000 பேருக்கு 70 சதவிகிதம்,  அதற்கடுத்த 1000 பேருக்கு 60 சதவிகிதம், அதற்கடுத்த 1000 பேருக்கு 50 சதவிகிதம் என, கட்டணச் சலுகை உண்டு. ஏப்ரல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நீட்

யார் விண்ணப்பிக்கலாம்? 

12-ம் வகுப்பு முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள். 

எப்படி விண்ணப்பிப்பது?

கீழே இருக்கும் ஃபார்மில் உங்களைப் பற்றிய விவரங்களை பதிவுசெய்யுங்கள்.  

கோர்ஸில் பயிற்சி பெற்று `நீட்’டை வெல்ல ஆல் தி பெஸ்ட்!

 

 

மேற்கண்ட ஃபாரத்தைப் பூர்த்திசெய்யுங்கள். அதைத் தொடர்ந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம், அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் வழி, கோர்ஸில் பங்கேற்கும் வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களும்  Careers360 நிறுவனத்திலிருந்து இமெயில் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!