வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (12/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (12/04/2018)

`நோயாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை!’ -மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் வழங்கியது

மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், பக்தர்கள் வழங்கிய வேட்டி, சேலைகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கியது.

மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் வழங்கிய வேட்டி, சேலைகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் அதிக அளவு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு வந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பாகுபாடு இல்லாமல் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் கோயிலுக்குக் கிடைக்கும் ஆன்மிக வேட்டி, சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது. இன்று ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் கோயில் இணைஆணையர் நடராஜன் உத்தரவின் படி, ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டியன் முன்னிலையில் வழங்கப்பட்டது .

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் அலுவலர் சம்பத் கூறுகையில்,``நோயாளிகள் பயன்பெறும் வகையில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுவருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நேரடியாக வந்து 3 மாதத்துக்கு ஒரு முறை வேட்டி சேலைகள் இருப்பைப் பொறுத்து  வழங்கி வருகிறோம். இதனால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்கள் பலரும் பயன்பெறுகின்றனர்’ என்றார்.