ஆளில்லாத வீட்டில் திருட்டைத் தடுக்க மதுரை போலீஸாரின் புதிய திட்டம்! | Madurai City police introduces new plan for preventing theft

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (12/04/2018)

கடைசி தொடர்பு:08:10 (13/04/2018)

ஆளில்லாத வீட்டில் திருட்டைத் தடுக்க மதுரை போலீஸாரின் புதிய திட்டம்!

வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுவிட்டால் அவர்கள் வீட்டில் சிசி கேமிரா பொறுத்தி கண்காணிக்கும்

வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுவிட்டால் அவர்கள் வீட்டில் சிசிடிவி கேமிரா பொறுத்தி கண்காணிக்கும் புதிய திட்டத்தை மதுரை மாநகரக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை தொடங்கி வைக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் வருகை தந்தார்.

மதுரை போலீஸின் புதிய திட்டம்

இதைப்பற்றி விளக்கி பேசிய மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்,''ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் 'மதுரை மாநகர காவல்' (madurai city police) ஆப்பில் தற்போது புதிதாக சில ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி போலீஸ் ஸ்டேஷன்களையும், அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பெயர்கள் தொடர்பு எண்களைத் தெரிந்துகொள்ளலாம். LHMS என்ற திட்டத்தின் மூலம் இணையம் மூலம் வீடுகளைக் கண்காணிக்க உள்ளோம். இதற்கு பொதுமக்கள், மதுரை மாநகரக் காவல் என்ற ஆப்பை ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, அதில் தாங்கள் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

வெளியூர் செல்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எங்கு செல்கிறீர்கள், எப்போது வருவீர்கள் என்ற விவரத்தையும், ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் ஐடி, செல்போன் நம்பர்களைப் பதிவு செய்ய வேண்டும். உடனே நாங்கள் அவர்கள் வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமிராக்களை பொறுத்தி தொடர்ந்து கண்காணிப்போம். ஆளில்லாத நேரத்தில் உங்கள் வீட்டுக்கு யாராவது வந்தாலோ, சந்தேகமான நபர்கள் தென்பட்டாலோ உடனே சம்பந்தட்டவர்களின் இ- மெயிலுக்கு அதுதொடர்பான வீடியோ காட்சிகள் அனுப்பி வைக்கப்படும். இ- மெயில் அனுப்பிய தகவல் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும். இது குறைந்தது 20 நாள்களுக்கு கண்காணிக்கப்படும். ஒரு தெருவில் இருபது வீடுகளுக்குப் பொறுத்தும் வகையில் எங்களிடம் கண்காணிப்புக் கருவிகள் உள்ளது. இதற்காக தனி கண்காணிப்புக் குழு வைத்துள்ளோம். தற்போது கூடல் புதூர், தல்லாகுளம் போலீஸ் லிமிட்டுக்குள் இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். மிக விரைவில் மதுரை மாநகரம் முழுக்க விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்துக்காக மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கியுள்ளார்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க