`அந்த 8 லட்ச ரூபாய்க்கு யார் பொறுப்பு?' - பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தொடரும் சர்ச்சை

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ராஜாராம் மற்றும் வணங்காமுடி ஆகியோரும் லஞ்சப் புகாரில் சிக்கினர். இதனிடையே, கணபதி மற்றும் ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்த தர்மராஜ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர்.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ராஜாராம் மற்றும் வணங்காமுடி ஆகியோரும் லஞ்சப் புகாரில் சிக்கினர். இதனிடையே, கணபதி மற்றும் ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

ஆனாலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளும், சர்ச்சைகளும் முடிந்தபாடில்லை. கணபதி லஞ்சப் புகாரில் சிக்கிய வழக்கில், முக்கிய குற்றவாளி (A3) மதிவாணனுக்கு, பொள்ளாச்சி உறுப்புக் கல்லூரியில், பேராசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. அகடமிக் கல்லூரியின் இயக்குநரான மதிவாணனுக்கு, பல்கலைக்கழக தொலைதொடர்பு இயக்குநர் பொறுப்பு வழங்கியதே தவறு என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தநிலையில், பொள்ளாச்சி உறுப்புக் கல்லூரியில் அவருக்கு பணி வழங்கியச் சம்பவம் பல்கலைக்கழக ஊழியர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளரான கிளாடிஸ் லீமா ரோஸின் பழைய வழக்கு ஒன்று பூதாகரமாகி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பழைய தேர்வு தாள்களை ஏலம்விட்டதில் லட்சக் கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நடத்த விசாரணையில், 3 லோடுகள் கணக்கில் வரவில்லை என்றும், இதனால் பல்கலைக்கழகத்துக்கு 8 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கிளாடிஸ் லீமா ரோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஊழல்

இதுதொடர்பாக, போலீஸில் அளித்தப் புகாருக்கும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், லீமா ரோஸ், வருகின்ற 14-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால், நாளை (வெள்ளிக்கிழமை) அவரது பணி நிறைவடைகிறது. ஆனால், அந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல், பல்கலைக்கழக நிர்வாகம் பம்மி வருகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகையில், ”உயர்கல்வித்துறை, தவறுமேல், தவறு செய்து வருகிறது. மதிவாணனுக்கு பொள்ளாச்சி உறுப்புக் கல்லூரியில் பணி கொடுத்துள்ளனர். அப்படிப் பார்த்தால், குற்றவாளிக்கு இவர்களே துணை நிற்கிறார்கள் என்று தானே அர்த்தம். லீமா ரோஸின் மீதும் நடவடிக்கை எடுக்காமல், டீல் பேசி வருகின்றனர். இவர்களால், பல்கலைக்கழகத்தின் நிதிதான் வீணாகிறது” என்றனர்.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவாலிடம் கேட்டபோது, ”லீமா ரோஸ் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவதற்கு முன், அவருக்கு சார்ஜ் மெமோ வழங்கப்படும்” என்றார்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!