`சிறுமிகள் பலாத்கார சம்பவம்' - நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராடிய ராகுல்காந்தி..!

ஜம்மு காஷ்மீரின் கத்துவா, உத்தரப்பிரதேசத்தின் உனா பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் ராகுல்காந்தி நேற்று (12.4.2018) நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா, உத்தரப்பிரதேசத்தின் உனா பகுதிகளில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்தினார்.

ஜம்மு-ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில், 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்கக்கோரி, அந்த மாநில பா.ஜ.க அமைச்சர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதேபோல, உத்தரப்பிரதேசம் உனா நகரில், பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ராகுல் காந்தி

photo credit : @INC

இந்தச் சம்பவங்களைக் கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினார்.

இந்தப் பேரணியில் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதோதரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர். 'தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம்' என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, '‘இங்கு நடக்கும் வன்முறைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது ஒரு தேசியப் பிரச்னை, அரசியல் பிரச்னையல்ல. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். குறைந்தபட்சம் பெண்கள் பாதுகாப்பையாவது உணர வேண்டும்’' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!