வெளியிடப்பட்ட நேரம்: 05:07 (13/04/2018)

கடைசி தொடர்பு:08:14 (13/04/2018)

முன்னாள் எம்.எல்.ஏ வீடு போலி ஆவணம் மூலம் அபகரிப்பு!

காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள், வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. வாகப் பணியாற்றியவர். கடந்த 1977-ம் ஆண்டு தசரதன் காலமாகி விட்டார்.  சென்னை இந்திராநகர்  வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், தமிழக அரசு தசரதனுக்கு வீடு ஒதுக்கிக் கொடுத்திருந்தது. தசரதனின் மறைவுக்குப் பின்னர், மனைவி மற்றும் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் அந்தக் குடியிருப்பு, தசரதனின் மனைவி லோகநாயகி  பெயருக்கு 2014-ம் ஆண்டு கிரையம் செய்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வீட்டுக்கு

ரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்றதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

எம் எல் ஏ வீடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவரின் தந்தை தசரதன். காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள், வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர். கடந்த 1977-ம் ஆண்டு தசரதன் காலமாகிவிட்டார்.  சென்னை இந்திராநகர்  வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், தமிழக அரசு தசரதனுக்கு வீடு ஒதுக்கிக்கொடுத்திருந்தது. தசரதனின் மறைவுக்குப் பின்னர், மனைவி மற்றும் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் அந்தக் குடியிருப்பு, தசரதனின் மனைவி லோகநாயகி  பெயருக்கு 2014-ம் ஆண்டு கிரையம்செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வீட்டுக்கு சரோஜா, கே.வி.சுசீலா, மோகனகிருஷ்ணன் ஆகியோர் உரிமை கொண்டாடினர். வீடு, தங்களுக்கே சொந்தம் என்பது போல போலி ஆவணங்களை உருவாக்கி, பத்திரப்பதிவுசெய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி லோகநாயகியின் மகள் சண்முகப்பிரியா, மாவட்ட சார்-பதிவாளர் (அடையாறு) ஆர்.மணிகண்டன்  கவனத்துக்குக் கொண்டுசென்றார். புகாரை விசாரித்த சார்-பதிவாளர் மணிகண்டன், ``தசரதன் மறைவுக்குப் பின்னர், வாரிசுதாரரான அவர் மனைவி லோகநாயகி பெயரில் 2014-ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்து தரப்பட்டுள்ளது. அதே வேளை, 1997 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் சரோஜா மற்றும் அவர் குடும்பத்தினரால் அரசுக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டு, முன் ஆவணங்கள் இல்லாமல் பத்திரப்பதிவுகளைச் செய்துள்ளனர் என்று தெரிகிறது. ஆகவே,  இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும்" என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  மனு அனுப்பிவைத்தார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வி.சீனிவாசன் விசாரித்தார். விசாரணைக்குப் பின்  மோகனகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.