வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (13/04/2018)

கடைசி தொடர்பு:11:27 (13/04/2018)

`கியாஸ் தீர்ந்துவிடாமல் இருக்க பிரத்யேக சிலிண்டர்' - ராட்சத பலூனை இறக்க போலீஸுக்கு வந்த உத்தரவு!

பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து கருப்பு கொடி காட்டும் விதமாக, மா.சுப்பிரமணியம் ஏற்றிய ராட்சத பலூனை தறையிறக்கும் பணியில் சென்னை போலீசார் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, வருகையைக் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் நேற்று கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தி.மு.க. எம்.எல்.ஏ. வான மா.சுப்பிரமணியம், அதிரடியாக தன்னுடைய வீட்டின் மாடியில்  கருப்பு நிற கியாஸ் பலூனை  ஏற்றிப் பறக்க விட்டது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த குட்டிக் குட்டி பலூன்கள் ஒருபுறம்  ஹெலிகாப்டரை மிரட்ட

பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து கறுப்புக்கொடி காட்டும் விதமாக, மா.சுப்பிரமணியம் ஏற்றிய ராட்சத பலூனை தரை இறக்கும் பணியில் சென்னை போலீஸார் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின், வருகையைக் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் நேற்று கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம், அதிரடியாகத் தன்னுடைய வீட்டின் மாடியில் கறுப்பு கியாஸ் பலூனை ஏற்றிப் பறக்கவிட்டது, போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த குட்டிக் குட்டி பலூன்கள் ஒருபுறம் ஹெலிகாப்டரை மிரட்ட, மொட்டை மாடியில் விஸ்வரூபமெடுத்து நின்ற இந்தப் பலூன், இன்னும் மிரட்டல் காட்டியது. காவல் உயரதிகாரிகளுக்கு வந்த உத்தரவால், சுப்பிரமணியம் வீட்டு மாடியில் ஏற்றப்பட்ட பலூனை, முதலில் தரை இறக்கும் வேலையைப் போலீஸார் வேகமாகக் கவனித்தனர்.  

பலூனில் கியாஸ் தீர்ந்துவிடாமல் இருக்க, பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர்களையும் அப்போது, போலீஸார் அங்கிருந்து அகற்றினர். பின்னர், பலூனில் நிரம்பியிருந்த கியாஸை, லாகவமாக வெளியேற்றி, பலூனை தார்ப்பாய் மடிப்பதுபோல மடித்து, கயிற்றால் கட்டி கீழே இறக்கினர். இந்தக் காட்சியைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால், சில நிமிடங்கள் சைதாப்பேட்டையில் பரபரப்பு நிலவியது. தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, மனித நேய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வி.சி.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.பி-க்கள் 2 பேர், எம்.எல்.ஏ-க்கள் 7 பேர், 353 பெண்கள் உட்பட 3,080 பேர்  கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.