காமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்செலுத்தும் இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இன்றைய பதக்கப்பட்டியலை தங்கம், வெள்ளியுடன் தொடங்கியுள்ளனர் இந்திய வீராங்கனைகள். 

காமன்வெல்த்
 

ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 4-ம் தேதி துவங்கியது.        11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.  பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல்  போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகின்றனர். முக்கியமாக துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஆதிக்கம் செலுத்திவருகிறது. 


இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான  50 மீட்டர் ரைஃபிள் பிரிவில், இந்தியாவின் தேஜஸ்வானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோன்று மற்றொரு வீராங்கனை அஞ்சு, வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த 50 மீட்டர், ரைஃபிள் பிரவுன் வுமன் (50  m Rifle Prone Women) பிரிவில், தேஜஸ்வானி  வெள்ளிப்பதக்கம் வென்றார்.  


 தற்போது 15 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 159 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 89 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!