வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (13/04/2018)

கடைசி தொடர்பு:11:54 (13/04/2018)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில், பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது.

தேரோட்டம்

 மதுரையில் அம்பாள் மீனாட்சி அரசாட்சி செய்வதைப்போல கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்பாள் அரசாட்சிசெய்துவருகிறாள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில், பங்குனித் திருவிழாவும் ஒன்று. இந்த  ஆண்டு பங்குனித் திருவிழா, கடந்த 5-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நாள்களில், தினமும் சுவாமி-அம்பாள், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

கோவில்பட்டி தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரை ரதாரோகனம் பூஜை நடைபெற்றது. 7.15 மணிக்கு தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, திருக்கோயில் முன்  இருந்து தொடங்கிய தேரை, ”சிவாய நம ஓம்... நம சிவாய...” என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையத்தை அடைந்தது திருத்தேர். நாளை 14-ம் தேதி, சித்திரை முதல் நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். 15-ம் தேதி நடைபெறும் தெப்ப உற்சவத் திருவிழாவுடன், திருவிழா நிறைவுபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க