சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்!

பங்குனிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடந்தது.

பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் இருந்து முட்டப்பதிக்கு  முத்துக்குடை ஊர்வலம் நடந்தது.

சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடந்தது.

கன்னியாகுமரி அருகே உள்ளது சாமிதோப்பு அய்யா  வைகுண்டசுவாமி தலைமை பதி. அய்யா வைகுண்டர் அவதரித்து சாமித்தோப்பில் தவம் இருக்கும்போது கலிநீச மன்னன் அவரைக் கைதுசெய்ய தனது படையை அனுப்பினான். இந்தச் செய்தியை அறிந்த அய்யா  சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்குச் சென்று அங்குத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணசாமியிடம் அறிவுரை பெற்றார். பின்னர் அன்று மாலையே சாமிதோப்புக்கு திரும்பி, மீண்டும் தவத்தைத் தொடர்ந்தார். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம்  கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் செல்வது வழக்கம்.

இந்த வருட முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை 6 மணிக்கு சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை பூஜிதகுரு பாலபிரஜாபதி  தொடங்கிவைத்தார். ஊர்வலம் கரும்பாட்டூர், விஜயநகரி, சந்தையடி, வெள்ளையந்தோப்பு,  ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், குண்டல், விவேகானந்தபுரம் வழியாக முட்டப்பதியை அடைந்தது. அங்குத் திருப்பாற்கடலில் பதமிட்டு  மதியம் பதியில் சிறப்பு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது.  பின்னர் இன்று மாலை முட்டப்பதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியைச் சென்றடைகிறது. தொடர்ந்து பதியில் சிறப்பு பணிவிடை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!