சிறந்த நடிகை ஸ்ரீதேவி... ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள்... 65-வது தேசிய விருதுகள் முழுப்பட்டியல்..! #NationalAwardsLiveUpdates

65 வது தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை அறிவித்து வருகிறார் .

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிவருகிறது மத்திய அரசு. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலிருந்து விருதுக்கானவர்களைத் தேர்வுசெய்ய இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இம்தியாஸ் ஹுசைன், பாடலாசிரியர் மெகபூப், தமிழ் நடிகை கௌதமி, கன்னட திரைப்பட இயக்குநர் பி.சேஷாத்ரி, அனிருத் ராய் சவுத்ரி, ரஞ்சித் தாஸ், ராஜேஷ் மபுஷ்கர், திரிபுராரி ஷர்மா மற்றும் ரூமி ஜெஃப்ரி  ஆகியோர் இடம்பெற்றி  ருந்தனர். இவர்கள், கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக விருதுக்கு விண்ணப்பித்திருந்த பல மாநில மொழித் திரைப்படங்களையும் பார்த்து, தேர்வுசெய்திருந்தனர். 

இந்த விருதுகள் அறிவிப்பு, இன்று ஏப்ரல் 13-ம் தேதி காலை 11.30-க்கு மேல் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், இயக்குநர் சேகர் கபூர் அறிவித்தார். 

தேசிய விருது பெற்றவர்களின் பெயர், சம்பந்தப்பட்ட திரைப்பட  விவரங்கள் வருமாறு:

சிறந்த லடாகி படம் : வாக்கிங் வித் தி விண்ட்

சிறந்த ஜசாரி படம் : சிஞ்சார்

சிறந்த துலு படம் : படாயி

சிறந்த ஒரியா படம் : ஹலோ அர்சி

சிறந்த மராத்தி படம் : கச்சா லிம்பு

சிறந்த மலையாளப் படம் : தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்

சிறந்த கன்னடப் படம் : ஹேபெட்டு ராமக்கா

சிறந்த இந்தி படம் : நியூட்டன்

சிறந்த பெங்காலி படம் : மயுராக்‌ஷி

சிறந்த அஸ்ஸாமி படம் : இஷு

சிறந்த தமிழ்ப் படம் : டு லெட்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த குஜராத்தி படம் : த்

சிறந்த சண்டைப்பயிற்சி இயக்குநர் - கிங் சாலமன் (பாகுபலி 2)

சிறந்த VFX - பாகுபலி 2

சிறந்த நடன இயக்குநர் - கணேஷ் ஆச்சார்யா 
பாடல் : கோரி டு லாத் மார்
படம் : டாய்லட் ஏக் ப்ரேம் கதா

சிறந்த பாடலாசிரியர் : ஜெ.எம். பிரஹலாத்
பாடல் : முத்துரத்னா

நடுவர் விருது : நாகர்கிர்தன்

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்களுக்காக : காற்று வெளியிடை
பின்னணி இசைக்காக : மாம்

சிறந்த ஒப்பனைக் கலைஞர் : ராம் ராஜக்
படம் : நாகர்கிர்தன்

சிறந்த கலை இயக்கம் : சந்தோஷ் ராமன் 
படம் : டேக் ஆஃப்

சிறந்த திரைக்கதை : சஜீவ் பசூர் ( தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்)
சிறந்த திரைக்கதை தழுவல் : ஜெயராஜ் (பயானகம்)

சிறந்த வசனம் : சம்பித் மோகன்டி (ஹலோ அர்சி)

சிறந்த ஒளிப்பதிவு : நிகில் எஸ்.பிரவீன் 
படம் : பயானகம்

சிறந்த படத்தொகுப்பு : ரீமா தாஸ்

சிறந்த பின்னணிப் பாடகி : சாஷா திரிபாதி
பாடல் : வான் வருவான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணிப் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
பாடல் : போய் மரைஞ்ய காலம் (விஸ்வாசபுரம் மன்சூர்)

சிறந்த துணை நடிகர் : ஃபகத் ஃபாசில்
படம் : தொண்டிமுதலும் த்ரிக்சாச்ஷியம்

சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா
படம் : இராடா

சிறந்த நடிகை : ஶ்ரீதேவி
படம் : மாம்

சிறந்த நடிகர் : ரித்தி சென்
படம் : நகர்கீர்தன்

சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படம் : தப்பா (மராத்தி)

சிறந்த திரைப்படம் : வில்லேஜ் ராக்ஸ்டார் (அஸ்ஸாம்)

அதிகம் கவனம் ஈர்த்த படம் : பாகுபலி 2

சிறந்த குழந்தை நட்சத்திரம் : பனிதா தாஸ்
படம் :  வில்லேஜ் ராக்ஸ்டார் 

சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் 
படம் : பயானகம்

சிறந்த குழந்தைகளுக்கான படம் : மோர்க்யா

சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : இராடா

சிறந்த சமூக திரைப்படம் : ஆலோருக்கம்

தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கண்ணா

சிறந்த திரைப்படம் :  வில்லேஜ் ராக்ஸ்டார்  
இயக்குநர் :   ரீமா தாஸ்

இந்திரா காந்தி விருது பெற்ற படம் : சிஞ்சார்
இயக்குநர் : பம்பாலி

சிறந்த திரைப்பட விமர்சகர் : கிரிதர் ஜா

சிறந்த சினிமா புத்தகம் : மத்மாஹி மணிப்பூர்
எழுத்தாளர் : பாபி மாஹெங்பாம்
பிரசுரிப்பவர் : அங்கொனிங்தோ பிரஸ்வேஷன் அண்ட் ஆக்குமென்டேஷன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!