ரூ.20 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் திருட்டு!

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 438 பிட்காயின்கள் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கரன்சி பரிமாற்ற நிறுவனம் ஒன்றிலிருந்து  
திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிட்காயின்

இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த காயின்செக்யூர் (Coinsecure) என்ற டிஜிட்டல் கரன்சி பரிமாற்ற நிறுவனம் காவல்துறையில்
அளித்துள்ள புகாரில், அந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஓ அமிதாப் சக்ஸேனா இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்ஸேனா நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால், அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை நடந்த டிஜிட்டல் கரன்சி திருட்டுகளில் இதுதான் மிகப்பெரிய திருட்டாக கருதப்படுகிறது. அண்மையில்தான் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் இன்னும் 3 மாதங்களுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டாளர்கள், தங்களது பரிவர்த்தனைகளுக்காக காயின்செக்யூர் தளத்தை அணுகியபோது, அவர்களால் தங்களது கணக்கில் உள்ள கரன்சிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கடந்த சில தினங்களாக அவர்களிடமிருந்து புகார் வந்ததைத் தொடர்ந்தே, இந்த பிட்காயின் திருட்டு வெளிச்சத்துக்கு வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!