Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

 சென்னை ஏ.டி.எம் மெஷினில் ஸ்கிம்மர் கருவி - போலி கார்டு தயாரித்த கும்பலைப் பிடித்த பொதுமக்கள் 

ஏடிஎம் கொள்ளை கும்பல்

தாம்பரத்தில், ஏ.டி.எம் மெஷினில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களைத் திருடும் கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் கொடுத்தனர். 

 சென்னை தாம்பரம் காந்தி சாலையில், தனியார் வங்கியின் ஏ.டி.எம் உள்ளது. அங்கு, பணம் எடுக்க பொதுமக்கள் சென்றபோது, இரண்டு பேர் நீண்ட நேரமாக ஏ.டி.எம் இயந்திரத்தின் அருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள், பணம் எடுப்பதாகவே பொதுமக்கள் கருதினர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து ஏதையோ ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தனர். அதைப் பார்த்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக ஏ.டி.எம் மையத்தின் ஷட்டரை பொதுமக்கள் பூட்டினர். இதனால், அவர்கள் இருவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர். பிறகு, தாம்பரம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸார் அங்கு வந்தனர். பிறகு, ஏ.டி.எம் மையத்துக்குள் சிக்கியவர்களை போலீஸார் மீட்டனர். பிறகு, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். 

ஏடிஎம் கொள்ளை


 விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 
 
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஏ.டி.எம் மையத்துக்குள் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்றோம். அதற்குள், ஏ.டி.எம் மையத்தின் ஷட்டரை பொதுமக்கள் பூட்டிவிட்டனர். இதனால், ஏ.டி.எம் மையத்துக்குள் இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தோம். அவர்கள் இருவரும்  நெல்லையைச் சேர்ந்த  சுல்தான்,சுலைமான் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, ஏ.டி.எம். கார்டுகளின் ரகசியத் தகவல்களைத் திருடியுள்ளனர். அதன்மூலம் போலி கார்டுகளைத் தயாரித்து, பணத்தையும் சுருட்டியுள்ளனர். அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம்" என்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement