`மீம்ஸ்களைப் போட்டு காயப்படுத்த வேண்டாம்’ - கண்ணீருடன் வைகோ வேண்டுகோள்

விருதுநகரில் வசிக்கும் வைகோவின் மைத்துனர் மகன் சரவணன்சுரேஷ் இன்று காலை பெட்ரோல் ஊற்றி திக்குளித்தார்.

விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் இன்று காலை பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

vaiko
 

காவிரி பிரச்னைக்காக இந்தத் தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்த வைகோ உடனே மதுரைக்கு வந்தார். 

மீம்ஸ்களை போட்டு


அங்கு சரவண சுரேஷை பார்த்து கண்ணீர்விட்டு கதறினார். அவரை உறவினர்களும் கட்சியினரும் தேற்றினார்கள். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''என்னைப் பற்றி அவதூறாகச் சீமான் தரப்பினர் போட்ட மீம்ஸ்களால் எனது குடும்பம் நொறுங்கிப் போய்விட்டது. ஸ்டர்லைட்  பிரச்னையில் நான் பணம் வாங்கிக்கொண்டதாக வந்த பொய்யான செய்திகளைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதைத் தன் மனைவியிடமும் சொல்லி வேதனை அடைந்துள்ளார். கடைசியாகத் தன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய முடிவுக்கு வந்துவிட்டார்.

90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே. என் குடும்பத்தில் யாரும் உயிர் துறந்தார்களா என்று சிலர் கேட்டனர். இன்று சரவண சுரேஷ் உயிர் துறக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். தொண்டர்களின் பாதங்களைத் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் இனி யாரும் இது போன்று செய்ய வேண்டாம். சீமான் தரப்பினர்  போட்ட மீம்ஸால் எனது குடும்பமே நொறுங்கிப்போய் உள்ளது. இனிமேல் தவறான மீம்ஸ்ஸை பதிவிட்டு காயப்படுத்த வேண்டாம்'' எனத் தெரிவித்தார். தற்போது சரவண சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!