தேசிய விருதுக் குழுவின் அறிவிப்பு! - குழப்பத்தில் `பாகுபலி'

2017-ல் சென்சார் செயப்பட்ட இந்திய திரைப்படங்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான 11 பேர் கொண்டக் குழுவால் தேர்வு செய்யப்பட்டது.  மொழி திரைப்படங்கள் அதிக அளவில் விருதுகளை வென்றுள்ளது

65 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. பிராந்திய மொழி திரைப்படங்கள் அதிக அளவில் விருதுகளை வென்றுள்ளது. 2017-ல் சென்சார் செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான 11 பேர் கொண்டக் குழு அமைக்கப்பட்டது. விண்ணப்பித்து இருந்த பல மாநில மொழித் திரைப்படங்களையும் பார்த்துத் தேர்வு செய்து இருந்தனர். 

இதில், சென்ற வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி 2 திரைப்படத்துக்குச் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், ஸ்டன்ட் மற்றும் முழு நீளப் பொழுதுபோக்கு திரைப்படம் என மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டது.

விருதுகளை அறிவித்த சேகர் கபூர் பாகுபலி ஸ்டன்ட் இயக்குநர் அபாஸ் அலி மொகுல் என அறிவித்தார். இதைத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சமூக வலைதள பக்கத்திலும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

தேசியவிருது

இதைத் தொடர்ந்து பாகுபலி 2 படத்தின் தயாரிப்பாளர் ஷோபு "அப்படி ஒருவர் பாகுபலி 1 மற்றும் 2 இரண்டிலும் ஸ்டன்ட் இயக்குநராகப் பணி புரியவில்லை" எனக் கூறியிருக்கிறார்.   

இப்படத்துக்கு கிங் சாலமன் என்பவர் ஸ்டன்ட் இயக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. மாற்று அறிவிப்புக்கு படக்குழு காத்துக்கொண்டிருக்கிறது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!