வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (13/04/2018)

`நான் ஆஜராவதைத் தடுக்கிறார்கள்' - கத்துவா விவகாரத்தில் கொல்லப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் புகார்!

`நான் ஆஜராவதைத் தடுக்கிறார்கள்' - கத்துவா விவகாரத்தில் கொல்லப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் புகார்!

காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா அதிர்ந்துபோய் கிடக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. தன் வீட்டில் வளர்ந்த ஆடுகள், குதிரைகள்தான் அவளுக்கு உலகம். தினமும் அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வாள். ஐந்தறிவு பிராணிகளின் வயிறு நிரம்பியவுடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவாள். பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் தன் வீட்டில் உள்ள ஆடு , குதிரைகளை மட்டும் தெளிவாக எண்ணத் தெரிகிற அளவுக்கு விவரம் அறிந்து வைத்திருந்தாள். 

ஆஷிஃபா வழக்கறிஞர் தீபிகாசிங்

ஜனவரி 10-ம் தேதி மேய்ச்சலுக்குச் சென்ற குதிரை ஒன்று வரவில்லை. குதிரையைத் தேடிச் சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறுமி தேடிச் சென்ற குதிரை அடுத்த நாள் வீடு திரும்பியது. சிறுமியை மனிதர் ரூபத்தில் உள்ள மிருகங்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தெரிந்தது. இந்தியாவை அதிர வைத்த இந்தச் சம்பவத்தில் சிறுமி தரப்புக்காக ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தீபிகா சிங் ராஜ்வத் என்ற பெண் வழக்கறிஞர் ஆஜராகிறார். ஆனால், தீபிகாசிங் வாதாடக் கூடாது என்று வழக்கறிஞர்களே தடுத்து வருகிறார்கள்.  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கறிஞர்கள்மீது புகார் எழுந்தது. 

இது தொடர்பா தீபிகா சிங் கூறுகையில், ''நான் இந்த வழக்கில் ஆஜராவதை ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா விரும்பவில்லை. நான் ஆஜராவதைத் தடுக்க அவர் முயன்று வருகிறார். என்னை மோசமான வார்த்தைகளாலும் திட்டினார். நான் ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு புகார் கடிதம் அளித்துள்ளேன். ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்'' எனத் தெரிவித்துள்ளார். 

சிறுமி கொல்லப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்கக் கூடாது சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் வேண்டுகோள். சி.பி.சி.ஐ டி.வழக்கை சரியாகக் கையாண்டு வருவதாகவும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்று தீபிகா சிங் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க