வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (13/04/2018)

நவாஸ் ஷெரீஃப் ஆயுள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்கத் தடை?

நவாஸ் ஷெரீப்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவருடைய ஆயுள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் தொலைக்காட்சி செய்திகளில், நவாஸ் ஷெரீஃப்புக்கு இந்த ஆயுள்காலத் தடையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருப்பாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரான 67 வயதான நவாஸ் ஷெரீஃப், வருமானத்துக்கு அதிகளவு சொத்து சேர்த்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கில் இஸ்லாமாபாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று அளித்துள்ள உத்தரவில், நவாஸின் ஆயுள்காலம் முழுவதும் பிரதமர் பதவி வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க