வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (13/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (13/04/2018)

ரூ.1,500 கட்டணம்... அரசின் கோடைக்கால குளுகுளு நீச்சல் பயிற்சி!

நீச்சல் பயிற்சி

சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சேலத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வருவதை பார்க்க முடிகிறது.

இதுபற்றி பயிற்சியாளரும் உயிர் பாதுகாவலருமான விக்கி, ''இந்த நீச்சல் குளம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம். இந்தக் குளமானது 25 மீட்டம் நீளமும் 13 மீட்டர் அகலமும் 3.5 முதல் 6 அடி ஆழமும் உடையது. இங்கு நீச்சல் கற்றுக் கொள்வதற்கு மற்றும் பொழுது போக்குக்காக நீச்சல் அடிக்க வருபவர்களுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

பயிற்சியாளரும் உயிர் பாதுகாவலருமான விக்கிஇந்த நீச்சல் குளத்தில் ஒவ்வோர் ஆண்டும் கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டும் கடந்த வாரத்திலிருந்து கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயிற்சி வகுப்பு, நீச்சல் அடிப்படை தெரியாதவர்கள் சேரலாம். கோடைக்கால இந்த நீச்சல் வகுப்புக்கு 1,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

நீச்சல் பயிற்சியின் நேரம் காலை 7 - 8, 8 - 9, 9 - 10 வரையும், 10 - 11 மகளிருக்காகவும் அதே போல 3 - 4, 4 - 5, 5 - 6 என ஒரு நாளைக்கு எடுக்கப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு நேரத்தில் வரலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் 12 நாள்கள் இந்த வகுப்புகள் எடுக்கிறோம். இந்த வகுப்பின் மூலம் நீச்சலுக்கான அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவர் நீச்சல் பயிற்சி செய்யும்போது அவர்கள் அருகிலேயே பயிற்சியாளரும் இருந்து கற்றுக்கொடுப்பார்.

மாணவர்களாக இருந்தால் இதைக் கற்றுக்கொண்டு நீச்சல் போட்டிக்கான பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு ஒரு வருடம் முழுவதும் 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பொழுதுபோக்குக்காக வருபவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. இளைஞர்களும் மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு நீச்சல் கற்றுக்கொள்ள வருகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 50-க்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க