`மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்!’ - கடற்படை வைஸ் அட்மிரல் அறிவுறுத்தல்

இந்திய கடல்பகுதியல் இலங்கை கடற்படை ஊடுருவல் இல்லை, பாக்ஜலசந்தி  மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படையினர்கள் ஈடுபட்டுவருவதாக வைஸ் அட்மீரல் கரம்பீர்சிங் சுனீல் லம்பா   தகவல்.  

இந்திய கடல்பகுதியல் இலங்கை கடற்படை ஊடுருவல் இல்லை, பாக்ஜலசந்தி  மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை ஈடுபட்டுவருவதாக வைஸ் அட்மீரல் கரம்பீர்சிங் சுனீல் லம்பா தெரிவித்துள்ளார்.

கடற்படை வைஸ் அட்மிரல் சுனீல் லம்பா

கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரம் தீவு பகுதியிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவதும் அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படை வைஸ் அட்மீரல் கரம்பீர்சிங்  சுனீல் லம்பா ராமேஸ்வரம் கடற்படைமுகாமில் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்திய பகுதிக்குள் இலங்கை கடற்படை ஊடுருவல் இல்லை. மீனவர்கள் எல்லைதாண்டி சென்று மீன்பிடிப்பதை  தவிர்க்க வேண்டும். மேலும் மீனவர்கள எல்லைதாண்டிச் சென்று மீன்பிடிப்பதை தடுக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடத்தல் மற்றும் ஊடுருவல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் கடலோரப் பகுதி பாதுகாப்புரீதியில் முக்கிய அங்கம் வகிப்பதால், இந்த கடற்படைத்தளத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படையினர்  ஈடுபட்டுவருவகின்றனர்'' என்றார். முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் உச்சிப்புளி கடற்படை விமான தளத்திற்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் வந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!