வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (14/04/2018)

கடைசி தொடர்பு:00:45 (14/04/2018)

`எந்த பிரச்னைக்கும் முடிவு இல்லாத நிலையில் தமிழகம் இருக்கிறது' - பிரேமலதா பேச்சு!

விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி படப்பையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

திரைத்துறைக்கு விஜயகாந்த் வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இதை விழாவாக கொண்டாட வேண்டும் என்பது காஞ்சி மாவட்ட செயலாளர் முருகேசனின் நீண்டநாள் ஆசை. இப்போது வேண்டாம், பிறகு பார்க்கலாம் என விஜயகாந்த் சொன்னபோதும், எப்படியோ ஒருவழியாக அனுமதி பெற்று விழாவிற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் விழா நடக்கும் இடத்தை பிரேமலதா விஜயகாந்த் இன்று (13.04.2018) பார்வையிட்டார்.  14-ம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்சி தொடங்கி, இரவு 8 மணிவரை நிகழச்சிகள் நடைபெற உள்ளன. 11 மணிமுதல் மாலை 5 மணிவரை கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பிறகு  விஜயகாந்த் பற்றிய வாழ்க்கை வரலாறு வீடியோ ஒளிபரப்பப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் விஜயகாந்த் பற்றி பேசுவார்கள். இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரேமலதா

“காவிரி பிரச்னைக்காக தே.மு.தி.க சரியான போராட்டங்கள் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?“

”அப்படியெல்லாம் கிடையாது. தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். மோடி வரும்போது எதிர்ப்பு காட்டவில்லையென்றால் நாங்கள் போராடவில்லை என சொல்வதை ஏற்க முடியாது. ஒருபக்கம் கறுப்பு கொடி என்கிறார்கள். ஒருபக்கம் பச்சை கொடி என்கிறார்கள். தே.மு.தி.க-வை பொறுத்தவரை எப்போதும் மூவர்ண கொடிதான். காவிரி பிரச்னை என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்னை. தற்போதைய பிரச்னை காவிரி. மழை வந்ததும் மறைந்துவிடும். எந்த பிரச்னைக்கும் முடிவு இல்லாமல் போகக்கூடிய நிலையில்தான் தமிழகம் இருக்கிறது. எதையுமே செய்ய முடியாமல் மத்திய அரசை சார்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

“ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் வருவார்களா?“

“அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. யாரெல்லாம் வருவார்கள் என்பது விழாவின்போதுதான் தெரியும். அதுவரை எங்களுக்கும் யாரெல்லாம் வருவார்கள் என்பது தெரியாது“

நீங்க எப்படி பீல் பண்றீங்க