வெளியிடப்பட்ட நேரம்: 01:32 (14/04/2018)

கடைசி தொடர்பு:01:32 (14/04/2018)

`கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால் இதுதான் வழி' - அரசை எச்சரிக்கும் கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் அச்சங்குளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் தனியார் காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம்  அச்சங்குளம் கிராமத்தில் விவசாய நிலங்களில்  தனியார் காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது அச்சங்குளம்.  இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 400 ஏக்கரில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு  சில தனியார் காற்றாலை நிறுவனங்கள் காற்றாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர். மின்சாரத் தேவையைக் காரணம் காட்டி காற்றாலை அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். காற்றாலை அமைப்பதற்காக நீர் வரும் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரமான மானாவாரி விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது, என, காற்றாலை அமைப்பதற்கு விவசாயிகளும், பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நட்த்தி வருகின்றனர். அதன்படி, காற்றாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த வாகனத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.   

அப்போது, அரசுக்கு உணர்த்தும் வகையில், காற்றாலையின் வாகனங்களில் துாக்கு போட்டுக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கயிற்றின் ஒருமுனையை காற்றாலையின் இறக்கைகள் ஏற்றி  நிற்கும் வண்டிகளிலும், மறுமுனையை தங்களின் கழுத்திலும் அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் பேசியபோது, “எங்க பகுதி முழுக்கவும் மானாவாரி விவசாய நிலங்கள்தான். மழை பெய்தால் மட்டும்தான் விவசாயம் நடக்கும். இதுல காற்றாலைகள் அமைக்கப்பட்டால் எப்படி விவசாயம் செய்ய முடியும்.

ஓடைகளில் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வரத்து கால்வாய் தடை பட்டுள்ளது. இந்த காற்றாலை மின்விசிறியால் பருவநிலையில் மாற்றம் ஏற்படும். அதிக வெப்பம் ஏற்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். இதிலிருந்து வெளியாகும் சத்தம் காதுவலியையும் இரைச்சலையும் ஏற்படுத்தும். இது குறித்து பல முறை மனு அளித்தும், பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களது கோரிக்கைக்கு இனியும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்” என்றனர் கிராம மக்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க