வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (14/04/2018)

கடைசி தொடர்பு:13:18 (14/04/2018)

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட முழங்குவோம்’ - கமல்ஹாசன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், அம்பேத்கர் பிறந்ததினமான இன்று அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், அம்பேத்கர் பிறந்ததினமான இன்று அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம் ஆகியவை இன்று கொண்டாடப்படுகிறது. இவற்றை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம்.

கமல்ஹாசன்

மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம். நாளை நமதே” என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில், அரசியல் சாசனத்தைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க