லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை! - திருமங்கலம் ஏ.சி.பி. அலுவலகத்தில் ரூ.5 லட்சம் சிக்கியது

கமீல் பாட்ஷா

சென்னை திருமங்கலம் ஏ.சி.பி. கமீல்பாட்ஷா அலுவலகத்தில் ரூ.5 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றிரவு (13.04.18) 10.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி லவகுமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் (CC 2 Team) ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையர் கமீல் பாட்ஷா அறையில் சோதனை செய்யத் தொடங்கினர். இன்று அதிகாலைவரை நீடித்த சோதனையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கமீல் பாட்ஷா அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.2.5 லட்சம்  பணத்தை கைப்பற்றியுள்ளனர். சோதனையின்போது உதவி ஆணையாளர் அறையில் கொடுங்கையூரைச் சேர்ந்த பில்டர் செல்வம் இருந்துள்ளார். உதவி ஆணையாளரைப் பார்க்க வந்ததாகக் கூறிய செல்வத்திடம் இருந்து ரூ 2,58,500 பணத்தைக்  கைப்பற்றினர்.   ஆக மொத்தம்  ரூ 5,08 500 பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றிச் சென்றனர். 

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. பணம் உதவி ஆணையர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது சம்பந்தமாக ஜெ.ஜெ. நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை  லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை செய்தனர். இவர் உதவி ஆணையரின் ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ ஆக உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!