அமைச்சர், கலெக்டர் கண் முன்னே தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயகுமார் முன்பாக 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டடம் கட்டுவத்தற்காக நாளை பூமி பூஜை நடைபெற இருக்கிறது. அதில் கலந்துகொள்ள முதல்வர், துணை முதல்வர் நாளை மதுரை வர உள்ளார்கள்.

தீக்குளிக்க முயற்சி

இதற்கான ஏற்பாடுகளைப்  பார்வையிட வருவாய்த் துறை அமைச்சர்  உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குச் சென்றபோது, மதுரை ஜெய்ஹிந்புரத்தைச் சேர்ந்த லெட்சுமி, ஆறுமுகத்தாய். காந்திமதி, ஈஸ்வரி ஆகியோர் அங்கு வந்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து  தங்கள் உடலில் ஊற்றி அமைச்சர், கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த அமைச்சர், கலெக்டர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்கள் கூறும்போது, ``கவாத் திருப்பதி குண்டுமணி, மணி, பிரேம், பாண்டி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கேரளாவுக்குக் கூலி வேலைக்குச் சென்றவர்களை, தனிப்படை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை என்ற பெயரில் அவர்களை ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வைத்து கவாத் திருப்பதி மற்றும் குண்டு மணி ஆகியோரின் கால்களை உடைத்து, இருவரையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைது செய்த மற்றவர்களைப் பார்க்க உறவினர்களை அனுமதிக்கவில்லை, அவர்களை என்கவுன்டரில் சுட்டு விடுவோம் என்று காவல் துறை மிரட்டுகிறார்கள்" என்று கூறினார்கள். 

இந்தச் சம்பவத்தால் மாவட்ட  வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிகவும் அப்செட்டானார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!