Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 6 மாதக் குழந்தை பலி

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில், பழைய வீடு இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது

வீடு இடிந்து குழந்தை பலி

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது. அதனால் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பழங்காலக் கட்டடங்களின் சுவர்கள் வலுவிழந்து வருகின்றன. இந்த நிலையில், நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் மழையின் தாக்குதலில் வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத கைக்குழந்தை பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

விக்னேஷ் என்பவர் தச்சநல்லூர் சிவன் கோயில் அருகே குடியிருந்து வருகிறார். மருத்துவப் பிரதிநிதியான அவர், மனைவி சித்ராதேவி மற்றும் 6 மாத கைக்குழந்தையான அருணா தர்ஷிகா ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டில் கைக்குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுந்தது. அதில், அருணா தர்ஷிகா தந்தை விக்னேஷ், தாய் சித்ராதேவி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினார்கள். 

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் விக்னேஷும் சித்ராதேவியும் சிறிய காயங்களுடன் தப்பினார்கள். ஆனால், அருணா தர்ஷிகா இடிபாடுகளில் சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்தது. வீடு இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் அங்கு வந்து பார்வையிட்டு குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement