`புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!’ - கலெக்டர் வீட்டை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தலித் அமைப்பினர் குமரி கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர்களுக்கு ஆதரவான அமைப்பினர் குமரி கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் வீடு முற்றுகை

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குளத்தில் மாற்று சமுதாயத்தினர் கழிவு நீரை கலந்ததாகவும். இதைத் தட்டிக்கேட்டவரின் தலையில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், மயிலாடி சுப்ரமணியபுரம் காலனி பகுதியில் இரவு நேரங்களில் பட்டியலின மக்கள் வீடுகளின் கதவை சிலர் தட்டுவது வாடிக்கையாக உள்ளதாகவும். கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதில் ஒருவர் மண்டை உடைந்திருக்கிறது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நாகர்கோவிலை அடுத்த கோணத்தில் உள்ள கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வீட்டை ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர். நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!