வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/04/2018)

கடைசி தொடர்பு:19:20 (14/04/2018)

சித்திரை முதல்நாள்! - குமரி கோயில்களில் களைகட்டிய கனிகாணும் நிகழ்ச்சி

கன்னியாகுமரி கோயிலில் இன்று கணிகாணும் நிகழ்ச்சி நடந்தது. கேரள முறைப்படி சுசீந்திரம் கோயிலில் நாளை கைநீட்டம் வழங்கப்படுகிறது.

ன்னியாகுமரி கோயில்களில் இன்று கணிகாணும் நிகழ்ச்சி நடந்தது. கேரள முறைப்படி சுசீந்திரம் கோயிலில் நாளை கைநீட்டம் வழங்கப்படுகிறது.

கனிகாணும் நிகழ்ச்சி

சித்திரை மாதம் பிறந்ததையொட்டி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் இன்று காலை கணிகாணும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் காய்கறிகள், பழவகைகள், பணம், நகை உள்ளிட்டவை அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும். இதைக் காலையில் பக்தர்கள் பார்த்தால் ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை நீட்டமாக காசுகள் வழங்கப்பட்டன. கோயிலில் கைநீட்டமாக பெறும் காசுகளை வீடுகளில் வைத்தால், அந்த ஆண்டு முழுவதும் தன வரவு அதிகரிக்கும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். மேலும் கேரள முறைப்படி மேடம் மாதம் விஷூ தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கோபூஜை

இதையடுத்து திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நாளை கணிகாணும் நிகழ்ச்சி நடக்கிறது. பத்மநாபசுவாமி கோயிலில் வழக்கப்படி பூஜைகள் நடக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், திருவட்டாறு ஆதிகேசவ சுவாமி கோயில்களில் நாளை காலை கணிகாணும் நிகழ்ச்சி மற்றும் கை நீட்டம் வழங்கப்படுகிறது.