Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`காஷ்மீர் சிறுமியைக் கொன்றவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை!’ - சத்யராஜ் வலியுறுத்தல்

பாலுமகேந்திரா நூலக தொடக்க விழா சென்னையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரோகிணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ராம், விஜய், வெற்றிமாறன், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பங்கேற்று நூலக அமைப்பாளர் அஜயன் பாலாவை வாழ்த்தியும், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அமரர் பாலுமாகேந்திராவைப் பற்றியும் பேசினர். 

சத்யராஜ்

இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், ``எனக்கு வேறு மொழிகள் சுட்டுப்போட்டாலும் வராது. அமீர்கானின் (தாரே சமீன் பர்) படத்தில் வரும் குழந்தைபோல நான். எனக்கு வேறெந்த மொழியும் எளிதாகப் பேச வருவதில்லை. எனக்கு ஆங்கில அறிவு பெரிதாகக் கிடையாது. அதைப்பற்றி  யாராவது கேட்டால் டாம் க்ரூஸுக்கு தமிழ் தெரியாததுபோல எனக்கு ஆங்கிலம் தெரியாது" என கலகலத்தார்.

சத்யராஜ்

எனக்கு என் தாய்மொழி தெரியும். அதுபோல் அத்தியாவசியம் இருந்தால் எந்த மொழி வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். அத்தியாவசியமில்லாமல் நாம் ஏன் இந்தி, சம்ஸ்கிருதம் கற்க வேண்டும்? தேவையே இல்லை. என் பிழைப்பு ஜப்பானில் இருந்தால் யார் வேண்டாமென்றாலும் நான் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வேன், கேரளாவில்தான் என் பிழைப்பென்றால், நான் மலையாளம் கற்றுக்கொள்வேன். அதுதான் உண்மை. இந்தி கற்றுத்தான் ஆக வேண்டும், சம்ஸ்கிருதம் கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் தேவையா எனக்கு அது?. ஒரு தடவை  சம்ஸ்கிருதம் கத்துக்கலாம் என யோசித்தேன், பிறகுதான் இங்கு மனிதர்களுக்கு தெரியாதமாம் அந்த மொழி. இப்போது அந்த மொழியைக் கற்று யாருடன் பேச?... இருக்கும் சிலைகளுடன் பேசினால் பதில் கிடைக்காது. இதற்குப் பதிலாக நான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் கற்றுக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

மேலும், காஷ்மிரில் பாலியல் வன்முறையால் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு மௌன அஞ்சலியும் கூட்டத்தில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளார்களிடம் பேசிய சத்யராஜ், அந்தச் சம்பவத்தைப்பற்றி பேச ஆரம்பித்து உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அப்போது அவர் ``காஷ்மீர் சிறுமியைக் கொன்ற கொலையாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் விளைவிப்பவர்களை கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கொந்தளித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement