வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (14/04/2018)

கடைசி தொடர்பு:18:59 (14/04/2018)

காவிரி பிரச்னைக்காக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தி.மு.க. அழைப்பு

காவிரி பிரச்னைக்காக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தி.மு.க. அழைப்பு

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் 16-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. 

தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், காவிரிப் பிரச்னை குறித்து வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 16) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் கூட்ட அரங்கில், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.கவின் தலைமைக்கழக அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த 1 ஆம் தேதியன்று அறிவாலயத்தில் தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே, ஏப்ரல் 5ஆம் தேதி பொது வேலைநிறுத்தமும், அதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்ற காவிரி உரிமை மீட்புப் பயணமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.