`இவர்கள்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகப் போராடுகிறார்கள்’ - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

நரைவிழுந்தவர்கள்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக போராடுகிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ரை விழுந்தவர்கள்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக போராடுகிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை கிராம மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூர் கிராமத்தில் `சுவராஜ் அபியான்’ திட்டத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணன் பாரதிராஜா போன்றவர்களை திரைத்துறையில், அவர்களது சாதனையைப் பார்த்து திகைத்துப் போயிருக்கிறேன். அவரது திறமையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கென்று ஒரு தனி, மண் வாசனை உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக திரைத் துறையினரின் பலபேர் தவறான புரிதலின் காரணமாக, உண்மைக்குப் புறம்பான நிலையைச் சார்ந்து நிற்பது வேதனையைத் தருகிறது. தயவுசெய்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். போலித்தனமான அரசியல் ஆதாயத்திற்காக இருக்கக்கூடிய நபர்களோடு நீங்கள் இணைந்திருப்பது வேதனையளிக்கிறது. போராடுவது தவறு கிடையாது. போராட்டம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பொது சொத்துக்களை அழிக்கக் கூடிய வகையில் அமையும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது

பிரதமர் எதற்காக வருகிறார் என்று போராளிகள் எத்தனை பேருக்கு தெரியும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் வந்தது கிடையாது. முதல் முறையாக பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஏராளமான முதலீடுகள் அமைய வேண்டும், தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்று எண்ணுகிறார். நம்முடைய ராணுவத்திற்குத் தேவையான பொருட்களை இங்கு அமைக்க வேண்டும் என்று ஒரு முயற்சி எடுத்திருக்கிறார். உலக நாடுகளை சேர்ந்த பல்லாயிரகணக்கான முதலீடுகள் வருவதற்கான முயற்சிக்கு கறுப்புக் கொடி காட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?. தமிழகத்தின் வளர்ச்சியில் இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. வளர்ச்சி திட்டங்களைத் தடுத்து நிறுத்த இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது?. நரைவிழுந்தவர்கள்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக போராடுகிறார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!