`இந்தியாவை விடவும் சீனாவுடன்தான் நெருக்கம் அதிகம்!’ - இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஒப்புதல்`

இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கையின் உறவு நெருக்கமானதாக இருப்பதாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகை தந்த அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை நெருக்கமான உறவு வைத்திருப்பதாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகை தந்த அவர் இதனைத் தெரிவித்தார். 

இலங்கை மாகாண முதல்வர்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நூலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இலங்கையில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை  

அதன் காரணமாக இலங்கை அரசியல் கட்சிகளிடமும் ஆளும் கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகின்றன. ஆனாலும், 2020-ம் ஆண்டு வரையிலும் பிரச்னை இல்லாமல் ஆட்சியைக் கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயற்சி செய்து வருகிறார்கள் 

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் விளைநிலங்கள் அரசாங்கத்தாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் தமிழர்கள் தங்களின் வீ்டுகளையும் விளைநிலங்களையும் இழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது இழந்த உரிமைகளை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்கச் செய்வதால் வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோகிறது. 

புத்தக வெளியீட்டு விழா

இவை அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை 1987-ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமைகள அனைத்தையும் பறித்துக் கொண்டுவிட்டார்கள். அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை. வடக்கு மாகாணப் பகுதிகளில் இப்போதும் ஒன்றரை லடசம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு மறுத்து வருகிறது ராணுவ வீரர்களால் விளை நிலங்கள் மற்றும் கட்டடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. 

இலங்கை அரசுக்கு இந்தியாவுடனான உறவு நெருக்கமானதாக இருக்கவில்லை. இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை அரசானது அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்கள் குடியேற்றப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை. மாநில சுயாட்சி வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!