வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (15/04/2018)

கடைசி தொடர்பு:02:00 (15/04/2018)

`சோகங்கள், துன்பங்கள் மறைந்து புதிய பாதை பிறக்கும்' - ஹர்பஜன் சிங் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் மக்களுக்கு தமிழில் பேசி புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் மக்களுக்கு தமிழில் பேசி புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்தரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டின் பெயர் விளம்பி. தமிழ் புத்தாண்டை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.

ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சோகங்கள், துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும். புது விடியல் பார்க்க காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும். உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய்மொழியாய் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

“வணக்கம் சென்னை! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தமிழில் பேசி வாழ்த்தும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க