`தண்ணீர் தேடி ஊருக்குள் படையெடுக்கும் வனவிலங்குகள்' - அச்சத்தில் ஊர் மக்கள்!

தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை, போடிமலை, கும்பக்கரை போன்ற மலைப்பகுதிகளில் வாழும், காட்டுமாடு, கரடி, சிறுத்தை, மான், பன்றி போன்ற வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி மலையடிவார ஊர்களுக்குள் நுழைந்துவிடுகின்றன.

’கோடை மழையை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை’ என்பார்கள். அது போல, கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை கை கொடுத்ததாகத் தெரியவில்லை. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, வனத்தில் தண்ணீர் இல்லாமல், வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துவருகிறது.

வனவிலங்குகள்

தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை, போடிமலை, கும்பக்கரை போன்ற மலைப்பகுதிகளில் வாழும், காட்டுமாடு, கரடி, சிறுத்தை, மான், பன்றி போன்ற வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி மலையடிவார ஊர்களுக்குள் நுழைந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்துவிடுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கோடைக் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வனவிலங்குகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வன தண்ணீர் தொட்டிகளானது எந்தவித பராமரிப்பின்றி சிதைந்துவிட்டதாகவும், அதனை முறையாகப் பராமரித்து குறிப்பிட்ட இடைவெளியில், தொட்டியில் தண்ணீர் விட்டால் மட்டுமே வனவிலங்குகள் ஊருக்குள் வருவது குறைக்கப்படும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் போது கிணற்றில் தவறிவிழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அப்படி கிணற்றில் வனவிலங்கு விழுந்தால் கிணற்றுக்கு சொந்தக்காரரிடம் சில ஆயிரங்கள், அபராதமாக வசூலிப்பதாகவும் வேதனைத் தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள். இதுகுறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!