`இரண்டு நாட்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்' - கேரள டி.ஜி.பி அதிரடி உத்தரவு!

கேரள மாநில காவல்நிலையங்களில் உள்ள லாக் அப்களில் இரண்டு நாட்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என டி.ஜி.பி. லோக்நாத் பெகரா உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநில காவல்நிலையங்களில் உள்ள லாக் அப்களில் இரண்டு நாட்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என டி.ஜி.பி லோக்நாத் பெகரா உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி லோக்நாத் பெகரா


கேரள மாநிலம் வராபுழா பகுதியில் ஒரு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் என்ற வாலிபர் லாக் அப்பில் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் வழக்குக்கு சம்பந்தமே இல்லாத நபரை அழைத்து சென்றதாகவும், அவர் லாக் அப்பில் இறந்து விட்டதாகவும் விவாதங்கள் கிளம்பின. இதையடுத்து கேரள மாநிலத்தின் அனைத்து லாக் அப்புகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என அம்மாநில டி.ஜி.பி. லோக்நாத் பெகரா உத்தரவிட்டுள்ளார். `மாநிலம் முழுவதும் உள்ள 471 காவல் நிலையங்களில் லாக் அப்களில் சி.சி.டி.வி. கேமரா இன்னும் இரணடு நாட்களில் பொருத்த வேண்டும். அந்த சி.சி.டி.வி. கேமராக்களை காவல் நிலையத்தின் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும். அதில் பதிவாகும் காட்சிகளை வாரம் ஒருமுறை சேமித்து பாதுகாப்பாக வைக்கவேண்டும்'' என அம்மாநில டி.ஜி.பி. லோக்நாத் பெகரா உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!