வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (15/04/2018)

கடைசி தொடர்பு:07:30 (15/04/2018)

‘யோகி அரசின் அறிவிப்புகள் அனைத்தும் பொய்’ - அகிலேஷ் யாதவ் தாக்கு!

உத்தர பிரதேசத்தின் உன்னாவோ பாலியல் வன்கொடுமை சம்பவம், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குழைந்திருப்பதை உறுதி செய்துள்ளது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் உன்னாவோ பாலியல் வன்கொடுமை சம்பவம், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குழைந்திருப்பதை உறுதி செய்துள்ளது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, ‘‘மாநில காவல்துறைத் தலைவரும், உள்துறை முதன்மைச் செயலாளரும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க எம்.எல்.ஏவை ‘மதிப்பிற்குரியவர்’ என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தார்கள். உ.பி-யை ஆளும் பா.ஜ.க அரசு, மாநில மக்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அட்டூழியங்களில் ஈடுபடுகிறது.

உன்னாவோ பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்யத் துவங்கியுள்ளது. இந்த விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகிறோம். சட்டம், ஒழுங்கு தொடர்பாக யோகி அரசு மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், அந்த அறிவிப்புகள் அனைத்தும் பொய் என்று உன்னாவோ சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையில், அலஹாபாத் உயர் நீதிமன்றம் தாமாக தலையிட்டு உத்தரவு பிறப்பித்த பின்பும், மாநில அரசு விரைவாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க