`பிறந்தநாளன்று உண்ணாவிரதப் போராட்டம்!' - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தனது பிறந்தநாளான ஏப்ரல் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தனது பிறந்தநாளான ஏப்ரல் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2014-ல் மாநிலங்களவையில் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை சிறப்பு அந்தஸ்து வழக்கப்படவில்லை. 

சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பாஜகவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பாஜகவும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 

இதன் காரணமாக சந்திரபாபுநாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஆந்திர முதல்வர் கொடுத்துவருகிறார். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாள் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். அன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!