இரவில் தங்கலாம், ஆன்லைனில் விலங்குகளை பார்க்கலாம்! - அசத்தும் வண்டலூர் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவை இரவில் தங்கி மறுநாள் பகலில் பார்க்கும் வசதியையும் ஆன்லைனில் விலங்குகளை பார்க்கும் வசதியையும் பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னையைச் சுற்றியுள்ளவர்களின் ஒருநாள் சுற்றுலா செல்லும் இடங்களில்  வண்டலூர் பூங்கா குறிப்பிடத்தக்கது. இங்குச் சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதியைப் பூங்கா நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்தது. தற்போது இரவு தங்கி மறுநாள் பார்க்கக் கூடிய வசதியைப் பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இரவில் தங்க நினைப்பவர்கள் பூங்காவின் வெப்சைட்டில் முன்பதிவு செய்ய வேண்டும். மாலை 6 மணிக்குப் பூங்கா ஓய்வு விடுதிக்கு வந்து தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தியின் மூலம் பூங்காவை சுற்றிப் பார்க்கலாம். சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தையும் ( 90 நிமிடங்கள் மட்டும்) அவர்கள் காணமுடியும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

முன்பதிவு செய்பவர்கள், 24 மணிநேரத்திற்கு முன்பு இணையத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். உணவுகளைப் பார்வையாளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் இரண்டு பெரியவர்கள் தங்க அனுமதி உண்டு. அவர்களுடன் பனிரெண்டு வயதிற்குட்பட்ட சிறியவர்கள் கூடுதலாக இரண்டுபேர் தங்கி கொள்ளலாம். இதற்கு 2000 ரூபாயும், அதற்குண்டான வரியையும் செலுத்த வேண்டும். அவர்களுடன் தங்கும் குழந்தைகளுக்குக் கூடுதலாக 500 ரூபாய் வரியுடன் செலுத்த வேண்டும்.

வண்டலூர் பூங்கா

மேலும் வன உயிரினங்களை ஆன்லைனில் கண்டுகளிக்கும் புதிய வசதியையும் வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக லைவ் ஸ்டீரிமிங் என்றும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நான்கு வன உயிரினம் மட்டுமே தற்போது ஆன்லைனில் நேரடியாக பார்க்க முடியும். இன்னும் சில தினங்களில் அனைத்து உயிரினங்களை www.aazp.in என்ற இணைய தளத்தில் பொதுமக்கள் பார்க்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!