இன்று முதல் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத்தடை!

மீன்களின் இனப்பெருக்க காலம் மற்றும் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 7 மாதமாக மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்ட சூழலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்க காலம் மற்றும் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 7 மாதமாக மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்ட சூழலில் மீன்பிடித்தடைக் காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

மீன்பிடித் தடைக்காலம்

 தமிழ்நாடு  கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு முறை சட்டம், 1983ன் படி, மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும்,  மீன்களின் இனப்பெருக்க காலங்களில், மீனவர்கள்  கடலில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு  இன்று (15.04.18) முதல் வரும் ஜுன் மாதம் 14 ம் தேதி வரையில் 61 நாட்கள், திருவள்ளுர் மாவட்டம் முதல்  கன்னியாகுமரி கடற்கரை வரையிலான கிழக்கு கடற்கரையில், மீன் பிடிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த  உத்தரவின் படி, விசைப்படகு, இழுவைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைக்காலம்

தூத்துக்குடியைப் பொறுத்தவரையில்   250க்கும் அதிகமான விசைப்படகுகள் மீனவர்கள் மீன் பிடித்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட நீளத்தை விட விதிகளை மீறி அதிக நீளம் கொண்ட விசைப்படகுகள் மற்றும் அதிக குதிரைத்திறன் கொண்ட  இன்ஜின்களை பயன்படுத்தும் விசைப்படகுகள் ஆகியவற்றிற்கு மீன்பிடிக்க மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இது சம்மந்தமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தடைவிதிக்கப்பட்ட விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கூறி கடந்த 7 மாதமாக விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது என விசைப்படகு மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!