Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`அமைதிப் போராட்டம் சில சமூக விரோதிகளால் திசைதிருப்பப்படுகிறது!’ - எச்சரிக்கும் தூத்துக்குடி கலெக்டர்

`ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடம் அச்ச உணர்வைத் தூண்டிடும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர்

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடியில் தனியார் ஆலையை மூடிட வலியுறுத்தி பல்வேறு தரப்பினரால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பொதுமக்களால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள புகார்கள் கருத்தில் கொள்ளப்பட்டு தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைளை அரசு எடுக்கும்.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 10-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1 ஐ, 31.03.18-க்குப் பிறகு தொடர்ந்து நடத்திட விண்ணப்பித்திருந்தது எனவும் 09.04.18 நாளிட்ட குறிப்பாணை மூலம் தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேந்தாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரும் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அண்மையில் தெளிவுபடுத்தி உள்ளார். தமிழக அரசால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழலில், போராட்டக்காரர்களின் அமைதிப் போராட்டம் சில சமூக விரோதிகளால் திசைதிருப்பப்பட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு தீவிரமாகப் பரிசீலித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதையும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதையும் போராட்டக்காரர்கள் கைவிட்டு தங்களது கோரிக்கைகளை அரசிடம் சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான முறையில் தெரிவித்தும், உரிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலமும் தீர்வு காணலாம். அரசும் தொடர்ந்து கோரிக்கைகளின் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், அதற்கு மாறாக மக்களுக்கு அச்ச உணர்வைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்  செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நேரிடும்.” என  எச்சரித்துள்ளார்.     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement