வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (15/04/2018)

கடைசி தொடர்பு:15:07 (15/04/2018)

நள்ளிரவில் மதுவிற்பனை! - அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கைது

நள்ளிரவு நேரத்தில் மது விற்ற அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

ள்ளிரவு நேரத்தில் மது விற்ற அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.  நாஞ்சில் முருகேசன்

நாகர்கோவில் தொகுதியில் கடந்தமுறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். இவர் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். ரியல் எஸ்டேட் தொழில் டல்லானதால் வேறு தொழில் இன்றி தவித்துவந்தார். இதையடுத்து புத்தேரி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டிப் பார் நடத்திவருகிறார். இந்த பாரில் 24 மணிநேரமும் மது விற்பனை நடப்பதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வடசேரி போலீசார் ரோந்துசென்றிருக்கின்றனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் பாரில் மது விற்றுக்கொண்டிருந்திருக்கிறார்.

இதை பார்த்த போலீசார், நாஞ்சில் முருகேசன் மற்றும் அவருடன் இருந்த கோபாலன், இளங்கோ, பிரபு ஆகியோரையும் கைதுசெய்து வடசேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 22 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதி இன்றி மது விற்றதாக வழக்குபதிவு செய்த போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர். அனுமதி இன்றி மது விற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.