`ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையில்லா கிராமங்கள்!’ - பெட்ரோலியத் துறை திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 34 ஊராட்சிகளை இம்மாதம் 20 ஆம் தேதி புகையில்லா கிராமங்களாக மாற்ற இந்திய அரசு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக அதன் விற்பனை மேலாளர் எம்.சரவணக்குமார் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 34 ஊராட்சிகளை இம்மாதம் 20 ஆம் தேதி புகையில்லா கிராமங்களாக மாற்ற மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக அதன் விற்பனை மேலாளர் எம்.சரவணக்குமார் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையில்லா கிராமங்கள் உருவாக்க திட்டம்.
 

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இம்மாதம் 20 ஆம் தேதியை உஜ்வாலா திவாஸ் நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் ராமஸ்வராஜ் அபியான் திட்டத்தின் படி கொண்டாடப்படவுள்ள உஜ்வாலா தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 34 கிராமங்களை தேர்வு செய்து அக்கிராமங்களை புகையில்லா கிராமமாக மாற்றிட முடிவு செய்யப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்டுள்ள 34 ஊராட்சிகளையும் எல்.பி.ஜி.பஞ்சாயத்து என அறிவிக்கப்பட உள்ளது.
 தேர்வு செய்யப்பட்டுள்ள 34 ஊராட்சிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமையல் எரிவாயுவை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது,விறகு பயன்படுத்தி சமையல் செய்வதால் உண்டாகும் புகையால் ஏற்படும் தீமைகள்,எரிவாயு உபயோகித்து சமைப்பதால் பொருளாதாரமும்,நேரமும் எவ்வாறு மிச்சமாகிறது ஆகியன பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ஒன்றியத்தில் பெருவயல்,தொருவளூர், வன்னிவயல்,லாந்தை,மாலங்குடி,வெள்ளா மரிச்சுக்கட்டி,களரி,மல்லல்,அழகன்குளம்,பனையடியேந்தல்,புல்லந்தை கிராமங்களும்,பரமக்குடி ஒன்றியத்தில் கள்ளிக்குடி,வெங்காளூர், மஞ்சூர்,கலையூர், காமன்கோட்டை, மென்னந்தி,தேத்தாங்கால்,வல்லக்குளம் உட்பட மொத்தம் 34 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஊராட்சிக்கும் 500 பயனாளிகளை பங்கேற்க வைத்து அதில் 100 பயனாளிகளுக்கு இலவசமாக எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!