சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்!

ராணுவத் தளவாட கண்காட்சியை ஒட்டி, சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர்க் கப்பல்களைக் காண மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

போர்க்கப்பல்

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தைப் பகுதியில், ஏப்ரல் 11-ம் தேதி முதல் இந்திய பாதுகாப்புத் துறை சார்பாக 'பாதுகாப்புக் கண்காட்சி 2018' நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ராணுவத் தளவாடக் கருவிகளைக் காண கடந்த இரு நாள்களாக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் மற்றொரு பகுதியாக சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ போர்க்கப்பல்களை பார்வையிடவும் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கியுள்ளது அரசு. 

போர்க் கப்பல்களை காணத் தீவுத்திடலில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த இரு நாள்களாக மக்கள் தொடர்ந்து கப்பல்களைப் பார்வையிட்டு வருகின்றனர். இன்று கண்காட்சியின் கடைசி நாள் என்பதாலும், விடுமுறை என்பதாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. தீவுத்திடல் வரும் மக்களிடம் அடையாள அட்டையின் நகல் பெறப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ சிகிச்சை,பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!