`அதிவேக இணைய வசதிக்காக 29 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்!’ - இஸ்ரோ தலைவர் தகவல்

இந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்த இஸ்ரோ மையத்தின் தலைவரான சிவன், அதிவேக இணையதள வசதிக்காக்கவும் கிராம மக்கள் பயன்பாட்டுக்காகவும் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்த இஸ்ரோ மையத்தின் தலைவரான சிவன், அதிவேக இணையதள வசதிக்காக்கவும் கிராம மக்கள் பயன்பாட்டுக்காகவும் 29 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார். 
  

29 செயற்கைக் கோள்கள் அனுப்ப திட்டம்

நெல்லையில் பொறியியல் கல்லூரி அருகில், இந்திய கடற்படையின் கீழ் செயல்பட்டு வரும் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் மையத்தின் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில், இந்திய செயற்கைகோள் தகவல் சேகரிப்பு மையம் கட்டப்பட உள்ளது. இஸ்ரோ மையத்தின் உதவியுடன் இந்திய கடற்படை சார்பாக 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த மையமானது தமிழகத்தில் அமைய இருக்கும் முதலாவது தகவல் சேகரிப்பு மையமாகும். 

இந்த மையத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. அதனை இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இதில் இந்திய கடற்படையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த மையத்துக்கான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்றும் அதற்கு ஏற்ற வகையில் பணிகளை விரைந்து முடிக்க இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,``நெல்லையில் அமைக்கப்படும் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மைய பணிகள் விரைவாக நிறைவுபெறும் என நம்புகிறேன். இந்த மையம் செயல்படத் தொடங்கும் போது இப்பகுதி மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு உருவாகும் அதிவேக இணையதள வசதிக்காகவும், கிராம மக்களின் பயன்பாட்டுக்காகவும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3- ஜி சாட் ராக்கெட் மூலாமாக 29 செயற்கைக்கோளை அனுப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது. 

பணிகள் தொடக்கம்

இந்த வருடம் இறுதியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். அதற்கான பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சந்திராயன் 2-ல் ஆய்வுக்காக ரோபோ அனுப்பப்பட உள்ளது. அந்த ரோபோ, சந்திரனில் இறங்கி அங்குள்ள தகவல்களை படம் பிடித்து உடனுக்குடன் அனுப்பி வைக்கும். அந்தத் தகவல்கள் அனைத்தையும் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்’’ எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!