Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் விழாவில் மிரண்ட யானை தூக்கி வீசியதில் பூ விற்கும் பெண் பலி!

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென மிரண்டு ஓடியதுடன், அங்கு பூ விற்பனை செய்துகொண்டிருந்த பெண்ணைத் தூக்கி வீசியதில் அவர் உயிரிழந்தார். 

சுடலை மாடசாமி கோயில்

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தில் பிரசித்திபெற்ற சுடலைமாடசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்தக் கோயிலின் கொடை விழா கடந்த இரு தினங்களாக நடெபெற்று வந்தது. கோயிலின் விழாவுக்காக தனியாருக்குச் சொந்தமான யானையை கோயில் நிர்வாகத்தினர் வாடகைக்கு அழைத்து வந்திருந்தனர். 

இந்தக் கோயில் விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, பூ விற்பனை செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் தனது மனைவி பத்திரகாளியுடன் வந்திருந்தார். இருவரும் கோயில் அருகில் தங்கியிருந்து பூ வியாபாரம் செய்து வந்தார்கள். வழக்கம்போல பூ வியாபாரம் செய்வதற்கு முன்பாக முத்துக்குமரன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.

மிரண்ட யானை

அப்போது கோயிலின் முன்பாக யானை நின்றுள்ளது. அதனை பார்த்தது, அதன் முன்பாகச் சென்ற பத்திரகாளி, யானையைத் தொட்டுக் கும்பிட்டு உள்ளார். அந்தச் சமயத்தில் திடீரென மிரண்ட யானை அங்கும் இங்கும் ஓடியதுடன், அங்கு நின்று கொண்டிருந்த பத்திரகாளியை துதிக்கையால் தூக்கி வீசியது. உடனடியாக யானைப் பாகன் வந்து யானையை சாந்தப்படுத்தினார். யானை தூக்கி எறிந்ததில் பலத்த காயம் அடைந்த பத்திரகாளி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும், கோயிலில் உள்ள பக்தர்கள் மற்றும் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி யானை அங்குள்ள பனைகள் சூழ்ந்த இடத்தில் தனியாகக் கட்டி வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், யானைக்கு உரிமம் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தனர். அத்துடன் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு மதம் பிடித்துள்ளதா? எனப் பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் போலீஸார் அடங்கிய குழுவினர் யானையைக் கண்காணித்து வருகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement