காவிரி பிரச்னையை திசை திருப்பவே ரஜினிகாந்த் 'ட்விட்'..! சீமான் ஆதங்கம்

காவிரிப் பிரச்னையை திசை திருப்பவே காவல்துறைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'தமிழகத்தில் நடப்பது அறவழிப் போராட்டம். தமிழர்கள் எப்போதும் அறவழிப் அறவழியில் தான் போராடுகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் கலவரம் வரும் என்றுதான் மத்திய அரசு கூறியது. தமிழ்நாட்டில் கலவரம் வரும் என்று கூறவில்லை. தமிழகத்தில் கலவரம் வராது என்று மத்திய அரசுக்கு தெரிந்துள்ளது. கர்நாடகத் தேர்தல் முடிந்தால் மட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்களா? காவரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று வார்த்தையைகூட மத்திய அரசு உச்சரிக்க மறுக்கிறது.

கர்நாடகாவில் காவிரி விவகாரம் என்பது அரசியல். அதனை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் என்பது உயிர் ஆதாரம். பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் போராட்டத்தையும், பாதிப்புக்கு ஆளாக்குபவர்களின் போராட்டத்தையும் ஒன்றாக பார்க்கக் கூடாது. நான், பல பேருடன் புகைப்படம் எடுத்துள்ளேன். காவல்துறையை தாக்கிய நபரும் நானும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இருப்பதால், அவர் என்னுடைய கட்சி கிடையாது. அவர், படம் இருந்தால், அவரை காவல்துறை கைது செய்யலாமே. எனது, கட்சியாக இருந்தால், நான் உடனடியாக கட்சியை விட்டு வெளியேற்றுவிடுவேன். காவிரிப் பிரச்னையை திசை திருப்பவே காவல்துறைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காஷ்மீரில் காவல்துறையினரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்தொடர்பாக ரஜினி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!