‘45 நிமிடம் கழிவுநீர்த் தொட்டிக்குள் தவித்த சினைப் பசு!’

ஈரோட்டில் கழிவுநீர்த் தொட்டியில் தவறிவிழுந்த சினைப் பசு மாடு ஒன்று 45 நிமிட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

கழிவு நீர்த் தொட்டியில் தவித்த சினைப் பசு

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிற்கு அருகே அமைந்திருக்கிறது சி.எஸ்.ஐ மெட்ரிக் பள்ளி. இந்தப் பள்ளியில் ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அவருக்குச் சொந்தமாக பசு மாட்டை பள்ளி வளாகத்தினுள் அவர் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்தவகையில், இன்று ஞாயிறு விடுமுறை நாளையொட்டி அண்ணாமலை தோட்ட வேலையில் மும்மரமாக இருந்து, மாட்டை கவனிக்க மறந்து அசால்ட்டாக இருந்திருக்கிறார். 

கழிவுநீர்

இதற்கிடையே பள்ளி வளாகத்திற்குள் திறந்துகிடந்த 8 அடி ஆழமான கழிவுநீர்த் தொட்டிக்குள் அந்த சினைப் பசு மாடு விழுந்தது. மாட்டின் கதறலைக் கேட்டுத் தான் அண்ணாமலைக்கு விஷயமே தெரியவந்திருக்கிறது. அதன்பிறகு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 45 நிமிடம் போராடி அந்த சினைப் பசு மாட்டினை உயிரோடு மீட்டனர்.

கழிவுநீர்

இச்சம்பவம் குறித்து அருகிலிருந்தவர்கள் கூறுகையில், ‘ரொம்ப நாளாகவே இந்த கழிவுநீர்த் தொட்டி மூடாமல் திறந்தே தான் இருக்கு. ஒருவேளை ஸ்கூல் குழந்தைங்க ஏதாவது இதுல விழுந்திருந்தா என்ன ஆகுறது?... பாவம் சினையாக இருந்த இந்த வாயில்லா ஜீவன் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்’ என உச் கொட்டினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!