சட்டக் கல்லூரி மாணவி இடைநீக்கம்..! கனிமொழி கண்டனம்

காஷ்மீர் சிறுமி விவகாரம் குறித்து பேசியதற்காக சட்டக் கல்லூரி மாணவியை இடைநீக்கம் செய்ததற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 

கோவை  அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. பொறியியல் பட்டதாரியான பிரியா, சட்டப்படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சட்டப்படிப்பு படித்து வருகின்றார். மேலும் புரட்சி கர மாணவர் முன்னணி என்ற அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். அந்த மாணவி இருதினங்களுக்கு முன்னர், ககாஷ்மீர் சிறுமி விவகாரம் தொடர்பாக வகுப்பறையில் பேசியுள்ளார்.

அவ்வாறு, பேசியதற்காக அவரை திட்டிய பேராசிரியர்கள், கல்லூரியிலிருந்தும் இடைநீக்கம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, 'காஷ்மீர் சிறுமிக்காக குரல் கொடுத்த கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியாவின் இடை நீக்கம் முரண் நகை. மாணவர்கள் சமூக விஷயங்களுக்காக குரல் கொடுப்பதில் என்ன தவறு? அம்மாணவியின் இடைநீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!