``காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மனுதான் அளிக்க முடியும்'' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

``காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் மனுதான் கொடுக்க முடியும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  ``நாட்டின் பிரதமருக்கு, முதலமைச்சர் சார்பில் கோரிக்கை வைக்கும்போது அதை விண்ணப்பம் மூலமாகத்தான் கொடுக்க முடியும். அதுதான் ஆதாரமாக இருக்கும்" என்றார். அப்போது, மனு கொடுத்ததுக்குப் பதிலாக மேடையில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வலியுறுத்தியிருக்கலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த எடப்பாடி, ``ஜெயலலிதா பிறந்தநாள்  விழாவின்போது வலியுறுத்தினோம். இப்போது கொடுத்திருக்கும் மனுவில், தமிழகத்தின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கொடுத்திருக்கிறது. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். உச்ச நீதிமன்றம்தான் அதிகாரம் படைத்த அமைப்பு. மே 3-ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அ.தி.மு.க அரசுதான். இந்த விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொரு கருத்தைக் கூறுவார்கள். அ.தி.மு.க பணம் வாங்கியிருந்தால் ஆலையை மூட முடியுமா? கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி அணியினர் இரட்டை இலையைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது கற்பனையான ஒன்று. யாரையோ தப்பிக்க வைக்கத்தான், ஜெயலலிதா குறித்து ராம் மோகனராவ் விசாரணை ஆணையத்தில் அப்படிக் கூறியுள்ளார். இது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!