Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெருஞ்சிக்குடி கோயிலில் உழவாரப்பணி செய்த  வீரசோழன் அணுக்கன் படை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாழடைந்த கோயிலில் கடந்த இரண்டு நாள்களாக குழு ஒன்று தன்னார்வத்துடன் உழவாரப்பணிகள் செய்து  புதிதாக்கியது.


உழவாரப் பணி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது நெருஞ்சிக்குடி கிராமம். இங்கு வரலாற்று முக்கியத்துவம்  பெற்ற உதயர்த்தாண்ட ஈஸ்வரர் கோயில் உள்ளது.  சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இக்கோயிலில் அவ்வப்போது வழிபாடு நடைபெற்று வந்ததது. ஆனாலும் முழுமையான பராமரிப்பின்றி கிடந்தது. கோயிலின் கருவறை கோபுரம், மண்டபம்  உள்ளிட்ட பகுதிகளில் விழுதுகளுடன்கூடிய ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து கோயிலை பாழ்படுத்திவந்தன. மேலும், கோயிலின் சுற்றுச்சுவர், வளாகம்  ஆகியவை முழுமையாகப் புதர் மண்டிக்கிடந்தது.

இந்நிலையில், திருச்சி பார்த்தி, முருகன், எடிசன் உள்ளிட்டோர் மூலமாக, இக்கோயிலின் நிலை குறித்து கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும், வீர சோழன் அணுக்கன் படையின் அமைப்பாளருமான பொறியாளர் கோமகன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சித்திரை 1-ம் நாளான நேற்றும் இன்றுமாக இரண்டு நாள்கள் உழவாரப் பணிஉழவாரப்பணியை மேற்கொண்டனர். இதில் உள்ளூர் இளைஞர்களும், ஊர் பிரமுகர்களும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். இக்கோயிலின் வரலாற்றுப் பின்னணியை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது, ``நான்கு தலைமுறை சோழ மன்னர்களின் கல்வெட்டு கொண்ட கோயில் இது. இக்கோயிலில் முதலாம் ஆதித்தன், ராஜேந்திரன், இரண்டாம் ராஜராஜன், குலோத்துங்கன் உள்ளிட்ட நான்கு முக்கிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இருப்பது தனிச்சிறப்பு. மேலும், பாண்டிய மன்னரான சுந்தரபண்டியனின் கல்வெட்டும் தனிக்கல்லில் காணப்படுகிறது. இத்துடன் இக்கோயிலின் புறப்பரப்பில் சுண்ணாம்பு பூச்சு இருந்து தற்போது அவை சிதைந்துள்ளது. அத்துடன் சிதைந்த ஓவியங்களையும் அந்தப் பகுதியில் இன்றும் காணலாம். இதன் மூலம் இக்கோயில் பிற்காலத்திலும் பயன்பாட்டில் உழவாரப் பணிஇருந்துள்ளதை அறியமுடிகிறது, எனினும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை" என்றார்.

உழவாரப்பணி குறித்து புதுக்கோட்டைத் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் பேசும்போது, "இக்கோவிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சிவனாரின் நேர்த்தியான வடிவங்களை புறச்சுவரிலும், முருகன், வள்ளி, தெய்வானை குடும்ப சகிதமாய் பிற்கால சோழர் கலைப்பாணியிலான சிற்பங்களும், பிள்ளையார், அம்பாள், மூலவர், நந்தி  ஆகிய சிற்பங்கள் வழிபாட்டிலும் உள்ளது. 
தாவரங்களால் மிக அதிகமாகச் சிதைந்த நிலையில், இருந்த  இக்கோயிலை, கோவிலின் கட்டுமானத்துக்கு எந்தச்சிதைவும் ஏற்படாமல், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  உழவாரப்பணியை மேற்கொண்டுள்ளதோடு கட்டுமானத்தை சிதைத்து வந்த மரங்களை வெட்டி நீக்கியுள்ளனர். மேலும், இது வளராமல் இருக்கும் வகையில்  களைக்கொல்லி உள்ளிட்டவேதிப்பொருள்களை  தெளித்துள்ளனர், இதனால் கட்டுமானங்கள் மேலும் சிதைபடாமல் காக்கப்பட்டுள்ளது மகிழ்வைத்தருகிறது. மேலும்,  இதனை உள்ளூர் மக்கள் முறையாகப் பராமரிக்க முன் வருவதே நிரந்தரத் தீர்வாகவும்  இந்த வரலாற்றுச் சின்னத்தை இன்னும் பல நூறாண்டுகள் காக்கவல்ல முன்னெடுப்பாகவும்  இருக்கும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement