Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”தமிழ்நாட்டை ஆயுதக் கிடங்காக மாற்றத் திட்டம்” - பேராசிரியர் ஜெயராமன் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை உருவாக்கவும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பேராசிரியர் ஜெயராமன்

இதுகுறித்துப் பேசிய அவர் ‘காவிரி, பாலாறு படுகைகளை சூறையாடி, இங்கேயே தொழிற்சாலைகளை அமைத்து, நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போகிறார்கள். கடற்கரைப் பகுதியில் புதிய துறைமுகங்களை அமைத்து அதன் வழியாக உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வார்கள். இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காவிரி, பாலாறு படுகையை மத்திய அரசு தாரை வார்க்கப் போகிறது. பெரும் ஆயுதக் கிடங்காக, தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாகத்தான் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் ராணுவ கேந்திரமாக மாற்றப்படவுள்ள பல மாவட்டங்கள், மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திய கனிம வள சூறையை, எதிர்த்துப் போராடிய அப்பகுதி மக்களை இந்திய அரசு ராணுவம் கொண்டு ஒடுக்கியது. அதே நிலை தமிழ்நாட்டில் உருவாகும். இதனை எதிர்த்துப் போராடி தடுக்க வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement